Monday, 14 March 2016

மாயமான மல்லையாவை பிடிச்சுட்டு வாங்காடன்னா.,மாசமான டீச்சரை பிடிச்சுட்டு வந்திருக்காய்ங்கெ! நாட்டுக்கு தேவையான செய்தி என சித்தரிக்கும் பத்திரிக்கைகளின் ஜனநாயகக் கடமை இதுதானா??

மாயமான மல்லையாவை பிடிச்சுட்டு வாங்கடானா, மாசமான டீச்சரை பிடிச்சுட்டு வந்திருக்காய்ங்கெ!”

பத்திரிக்கைகள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக தேவையற்ற செய்திகளை மிகைப்படுத்துகின்றன.இதன் மூலம் இளைய தலைமுறைகள் மனதில் ஆசிரியர் மானவர் உறவினை கொச்சைப்படுத்த நினைக்கின்றனர். இதனால் நமது கலாச்சார கட்டமைப்பை சீரழிக்க கார்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் முயற்சி செய்கின்றனர்.

சினிமாக்களில் தகாத கதைகளை படமாக்கி பணம் பார்க்கும் சமூகம்

அந்த படத்திற்கு விளம்பரம் என்ற பெயரில் மறைமுகமாக ஆதரவு தரும் பத்திரிக்கை தர்மம்.

இதில் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் கொடுத்து சினிமா தயாரிப்பாளரிடம் பணம் பரிக்கும் குள்ளநரித்தனம்.ஏன்?

தவறான படக்கதைகளை சுட்டிக்காட்டியது உண்டா ? ஏன்? வருங்கால சந்ததியினர் இதனை பின்பற்றி கெட்டொழியட்டும் என்றா?www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

செய்தி தொலைக்காட்சி என்ற பெயரில் தனது சேனல் ரேட்டிங்கை கூட்டுவதற்காக ஆபாச செய்திகளை வெளியிடுவது.

கேட்டால் தவறு செய்வதால் ஏற்படும் தீமைகளை விளக்குகிறது என்றொரு விளக்கம் வேறு.

எங்கோ ஓரிடத்தில் நடக்கும் கெட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட்டுவிட்டு நல்ல செய்திகள் பலவற்றிற்கு முக்கியத்துவம் தரலாமே.

தற்கொலை எண்ணத்திலிருந்த ஊரையே காப்பாற்றி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியது ஆனந்த் என்ற  ஆசிரியர் தான்.

தான் பணிபுரியும் பள்ளிக்காக தான்  பெறும் சம்பளத்தையே பள்ளிக்கூடம் கட்ட பயன்படுத்தியதும் ஓர் பெண் ஆசிரியர்தான்.

சாகும் தருவாயில் கூட தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ராஜம்மா டீச்சர் தோளில் சாய்ந்து இறக்கவேண்டும் என்று மும்பையிலிருந்து சென்னை வந்து ஆசிரியை தோளில் சாய்ந்து இறந்த மாணவியின் அன்பிற்கு யார் காரணம்?

இந்த செய்திகளெல்லாம் பத்திரிக்கைகளுக்கும் செய்தி சேனல்களுக்கும் தெரியாது.

காரணம் கார்பரேட் மயமாக மாறிய பத்திரிக்கை தர்மம்.

அதிகாரமில்லாத (இ.வா) ஆசிரியர்கள் என்றால் காவலர்களுக்கும் இழக்காரம்தான்.

பல ஆயிரங்களை கொள்ளையடித்து பல தொழிலாளர்கள்  வாழ்வாதாரத்தை கெடுத்துவிட்டு  அரசியல்வாதிகள் துணையோடு அடுத்த நாட்டில் குடியேறியவனை தனிப்படை அமைத்து பிடித்துவர  நீதிமன்றம் கொடுத்த சம்மன் என்னவாயிற்றோ?

காலம்தான் பதில் சொல்லனும்.

www.samybharathi.blogspot.com


No comments:

Post a Comment