Saturday, 30 September 2017

அன்பு உறவுகளே அக்டோபர் 6 -ந்தேதி மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை . 1. வருகிறவர்கள் கூடிய மட்டிலும் சிகப்பு பச்சை கரை வேஷ்டி வெள்ளை சட்டை அல்லது பேண்ட் சட்டையுடன் வரவேண்டும

அன்பு உறவுகளே

அக்டோபர் 6 -ந்தேதி மாநாட்டில் கலந்து கொள்பவர்கள்   செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை .
1. வருகிறவர்கள்   கூடிய மட்டிலும் சிகப்பு பச்சை கரை வேஷ்டி  வெள்ளை சட்டை அல்லது பேண்ட் சட்டையுடன் வரவேண்டும் . தயவு செய்து லுங்கியுடன் வரவேண்டாம்.

2.  ஊரிலிருந்து வாகனம் புறப்பட்டதிலிருந்து திரும்பி செல்லும் வரை யாரும் கண்டிப்பாக  மது அருந்த கூடாது.
மது அருந்துவது நமது டாக்டர் ஐயாவிற்கு பிடிக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே

3. வருகிற வழியில்  கோஷங்கள் எழுப்ப கூடாது . அப்படியே எழுப்பினாலும் வாழ்க கோஷத்தை தவிர எந்த ஒரு தலைவரையோ சமுதாயத்தை விமர்ச்சித்தோ ஒழிக என்றோ கோஷம் போடக்கூடாது

4.  பொது மக்களுக்கும் காவல் துறையும் நமக்கு  ஆதரவாக நடந்து கொள்ளும் விதமாக பொறுமையை கடைபிடிக்க வேண்டும்

5. தேவேந்திரன் பண்பாட்டில் உயர்ந்தவன் என்று பார்க்கும் மக்களுக்கு தெரிய வேண்டும்

6. ஒவ்வொரும் தலைவரின் அருகில் செல்ல  வேண்டும் என்று முண்டியடித்து செல்லக்கூடாது .

7. மக்கள் தெரிந்தவர்களாக இணைந்து இருக்க வேண்டும்.

8. தெரியாத நபரை உள்ளே சேர்க்க கூடாது. யாரிடம் சந்தேகம் என்றாலும் கேட்டு தெரிந்து தெளிவாக அவர் தேவேந்திரர் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும்

9.  யாரேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது தூண்டினாலோ மற்றவர் அவரை சரி செய்ய வேண்டும் அல்லது அவரை விட்டு அனைவரும் விலகி நிற்க வேண்டும். அருகில் உள்ள  காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கலாம்.

10. வன்முறையில் யாரவது ஈ.டு பட்டால் அவரிடமிருந்து  ஒதுங்கி நின்று காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் .

11. யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது

12. யாரவது ஏதாவது அசம்பாவிதம் என்று வதந்திகள் பரப்பினால் நம்ப கூடாது. நமது அமைப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

1995 ம் ஆண்டு கொடியங்குளம் கொடுமைக்கு நடந்த கண்டன பேரணியை பார்த்து சென்னையே அதிர்ந்தது .

இப்போது நம் மக்களின் செயல்களை பார்த்து இப்படியும் நடந்து கொள்ளும் ஒரு நாகரீகமான சமூகமா என்று வியக்க வேண்டும்

நாம் வேறு பட்டியலின மக்கள் வேறு என்பதை நிருபிக்க வேண்டும்.

செ.செல்லத்துரை தேவேந்திரர்
பட்டியல் வெளியேற்றகுழு
9003070467

No comments:

Post a Comment