Wednesday, 27 April 2016

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு .....நத்தம் விஸ்வநாதன் மீதான ஊழல் புகார் பற்றி விசாரணை நடத்த உத்தரவு

.... சென்னை: சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தொடர்பான தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தமிழக மின்துறை அமைச்சரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ. 5.01 என்ற விலையில் வாங்கும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் யூனிட்டுக்கு ரூ. 7.01 தருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்ததன் காரணமாக, அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 525 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றிருப்பதாகவும் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரத்துக்கு மார்ச் மாதம் அனுப்பப்பட்ட புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரம் ஸ்ரீனிவாஸின் புகார் குறித்து விசாரணை செய்து ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Sunday, 24 April 2016

அள்ள அள்ள பணம் ....பட்டுவாடா அரசியல்வாதி வீட்டில். ரூ.250 கோடியாம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!! பணம் சொல்வதையும் செய்யும்..சொல்லாததையும் செய்யும்.

தேர்தலில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கரூர் பைனான்சியர் அன்புச்செல்வன் வீட்டில் பதுக்கிய, 250 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் கமிஷன் புகாரில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தேர்தல் கமிஷன் உத்தரவில், நேற்று ஒரே நாளில், 45 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில், பண பட்டுவாடாவை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், வருமான வரித்துறை துணை இயக்குனர் தலைமையில், ஒரு உதவி கமிஷனர், ஐந்து ஊழியர், ஆறு ஆய்வாளர் இடம்பெற்ற படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சில வாரங்களாக, பண நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

கரூரில், அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.'இந்தச் சோதனையில், 10.30 லட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று, ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. 'கரூரில் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவு பணம்' என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, 'அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்' என, தகவல்கள் கிடைத்தன. இதேபோல், தமிழகம் முழுவதும், பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக, சந்தேகிக்கப்பட்ட இடங்களில், நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.

கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருட்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * சென்னையில், ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டு, பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் உறவினர் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டு உள்ளது. * கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. * இந்தக் கேமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடந்தது எப்படி?

'தேர்தல் பட்டுவாடாவுக்காக, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வீடு மற்றும் இடங்களில், பறக்கும் படையினர் சோதனை நடத்தக் கூடாது. வருமான வரித் துறையினர் தான் சோதனை நடத்த வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சோதனை எப்படி நடத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள வழிமுறைகள்: * பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தால், உடனடியாக செலவினப் பார்வையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். * செலவின பார்வையாளர் அல்லது பொறுப்பு அதிகாரி, உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிக்கு, தகவல் தெரிவித்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். * பறக்கும் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். சம்பவ இடத்திற்கு சற்று துாரத்தில் இருந்தபடி, வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்து, விசாரணை நடத்தும் வரை, அந்தப் பகுதியை கண்காணிக்க வேண்டும். * வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதற்கு முன், யாரும் அந்த பகுதிக்குள் நுழையக் கூடாது. * பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் நடவடிக்கைகளை, வருமான வரி அதிகாரிகள் மேற்கொள்வர். அவர்கள் கேட்டுக்கொண்டால், செலவின பார்வையாளர் மற்றும் பறக்கும் படையினர் உள்ளே செல்லலாம்.இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. '108' ஆம்புலன்சில்பணம் கடத்தலா? கரூரில், '108' ஆம்புலன்சில் கடத்தப்பட்ட பணம் சிக்கியதாக தகவல் பரவியது. இதுகுறித்து, '108' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:கரூரில், பணம் கொண்டு சென்றதாக கூறப்படும் வாகனம், நெய்வேலி பதிவு எண் கொண்ட தனியார் வாகனம்; அது, '108' ஆம்புலன்ஸ் அல்ல. தேர்தலையொட்டி, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில், 25 விதிமுறைகள் உள்ளன. அதன்படியே, ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். '108' ஆம்புலன்ஸ்சில் பணம் கடத்தப்பட்டதாக வந்த தகவல் தவறானது. இவ்வாறு அவர் கூறினார். யார் அந்த அன்புநாதன்? கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த, அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி. 10 ஆண்டுகளுக்கு முன், கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதிலிருந்து விலகிய பின், புதிதாக, நிதி நிறுவனம் துவங்கி, தன் மகன் அன்புநாதன், 42, பொறுப்பில் ஒப்படைத்தார். அவர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு பணம் சப்ளை செய்யும் பைனான்சியராக வலம் வருகிறார்.அப்போது, உள்ளூர், அ.தி.மு.க., பிரமுகரும், தன் ஜாதியை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜியுடன் நட்புஏற்பட்டது. மேலும், திண்டுக்கல்லில் உள்ள அக்காவின் வீட்டுக்கு சென்று வரும்போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடமும் பழக்கம் ஏற்பட்டது. அவரது பணத்துக்கு பாதுகாப்பு கொடுப்பவராகவும், கொடுக்கல், வாங்கல் செய்யக்கூடியவராகவும் உருவெடுத்தார். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு அமைச்சருக்கும், குறிப்பிட்ட தொகுதிக்கு பணம் சப்ளை செய்யும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையை பாதுகாப்புடன் அன்புநாதன் செய்து கொடுத்ததாக, அப்போதே தகவல் பரவியது.அவர் கூறியபடி, திருச்சி, கோவை மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பணம் சப்ளை செய்யப்பட்டது. எந்த பிரச்னையும் ஏற்படாமல், பாதுகாப்பாக பணம் சப்ளை செய்து கொடுத்ததால், தற்போதைய சட்டசபை தேர்தலுக்கு, பல அமைச்சர்களுக்கு அன்புநாதன் தேவைப்பட்டுள்ளார். அதனால், அவர் மூலம், பல கோடி ரூபாய், கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, தொகுதி வாரியாக சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக, தி.மு.க., பிரமுகர்கள் கூறினர். பண புழக்கம் உள்ள கரூர் பகுதி திருச்சியை அடுத்த கரூர், திண்டுக்கல், செல்லுார் ஆகிய இடங்களில், 80க்கும் மேற்பட்ட பஸ் பாடி கட்டும் தொழிற்சாலைகள் உள்ளன. கரூரில் மட்டும், 60 தொழிற்சாலைகள் உள்ளன. 20 பேர் குழு, 25 நாட்களில், ஒரு பஸ்சை தயாரிக்கும். ஏற்கனவே தயாரித்த பஸ்கள், மார்ச் மாதத்திற்கு முன் இயக்கத்திற்கு வந்து விட்டன. ஜூன் மாதத்திற்கு பின் தான், பஸ் அடிச்சட்டம் வாங்கப்பட்டு மீண்டும் பணி விறுவிறுப்பாகும். பஸ் பாடி கட்டும் தொழிலால், கரூர் பகுதியில் பண புழக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 45 இடங்களில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: * கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருட்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * சென்னையில், ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டு, பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் உறவினர் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டு உள்ளது. * கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. * இந்தக் கேமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். ஆம்புலன்ஸ் மீது வழக்கு அன்புநாதன் குடோனில் கைப்பற்றப்பட்ட ஆம்புலன்சில், 'நேஷனல் ஹெல்த் ரூரல் டெவலப்மென்ட் ஸ்கீம், கவர்ன்மென்ட் ஆப் இந்தியா' என, எழுதப்பட்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் பதிவு எண் போலியாக இருந்ததால் வாகனத்தை கைப்பற்றி, வேலாயுதம்பாளையம் போலீ சார், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரெய்டு நடந்த போது, மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனமும், கரூர் நகர் பகுதியில் கைப்பற்றப்பட்டது. அந்த வாகனம் எங்கு உள்ளது; அதில் எவ்வளவுபணம் இருந்தது என்பதை அதிகாரிகள் கூற மறுத்துவருகின்றனர். கரூரில் நடந்தது என்ன? கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அன்புநாதன் குடோனில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு, 21ம் தேதி இரவு புகார் சென்றது.
இந்த தகவல், பதுக்கல் கும்பலுக்கு தெரிய வந்ததால் அவர்களும் உஷாராகி, பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை இடமாற்றம் செய்யும் தகவல் பரவியது. ஏப்., 22 காலை, 'ரெய்டு' நடத்த, கரூர் எஸ்.பி., வந்திதா பாண்டே தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், அன்புநாதன் குடோனுக்கு சென்றனர். அங்கு, 10.33 லட்சம் ரூபாய் ரொக்கம்; நான்கு கார்; ஒரு டிராக்டர்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருந்தும், மாவட்ட அதிகாரிகளின் உதவி இல்லாமல், வருமான வரித்துறை (புலனாய்வு பிரிவு) அதிகாரி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியிலிருந்து, நேற்று காலை, 10:30 மணி வரை, அன்புநாதனின் வீட்டில் சோதனை நடத்தினர். போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால், தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச அதிகாரிகள் தரப்பிலிருந்து, அன்புநாதன் தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது. அவர்கள் சுதாரித்து, அன்று இரவே பல கோடி ரூபாயை, வேறு இடங்களில் பதுக்கியதாக தெரிகிறது. அன்புநாதன் குடோனில் இருந்து, 10.33 லட்சமும்; வீட்டில் இருந்து, 4.77 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், 250 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் பணம் கைப்பற்றி, தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆம்புலன்ஸ் மீது வழக்கு அன்புநாதன் குடோனில் கைப்பற்றப்பட்ட ஆம்புலன்சில், 'நேஷனல் ஹெல்த் ரூரல் டெவலப்மென்ட் ஸ்கீம், கவர்ன்மென்ட் ஆப் இந்தியா' என, எழுதப்பட்டிருந்தது.அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் பதிவு எண் போலியாக இருந்ததால் வாகனத்தை கைப்பற்றி, வேலாயுதம்பாளையம் போலீ சார், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரெய்டு நடந்த போது, மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனமும், கரூர் நகர் பகுதியில் கைப்பற்றப்பட்டது. அந்த வாகனம் எங்கு உள்ளது; அதில் எவ்வளவுபணம் இருந்தது என்பதை அதிகாரிகள் கூற மறுத்து வருகின்றனர். 'ரெய்டு'க்கு எதிர்ப்பு அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, அவரது வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்த பின், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கிளம்பினர். உள்ளூர் பிரமுகர்கள் சிலர், அன்புநாதனுக்கு ஆதரவாக, பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். கலெக்டரை மாற்ற கோரிக்கை கரூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த போது மணல், 'மாபியா'க்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்தது. அதனால் அவர் கரூருக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்த இடமாறுதலுக்கு, கிருஷ்ணகிரியில் கல்லுாரி நடத்தி வரும் லோக்சபா துணை சபாநாயகரும், கரூர் எம்.பி.,யுமான தம்பிதுரை காரணம் என்று கூறப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கரூர் பி.டி.ஓ., அன்புசெல்வன் தலைமையிலான பறக்கும் படையினர், வாகன தணிக்கையின் போது, 10 லட்சம் ரூபாய், பரிசு பொருட்களை கைப்பற்றினர்; அவற்றை விடுவிக்க, கலெக்டர் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக, கரூர் மாவட்ட, தி.மு.க.,வினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு புகார் அனுப்பி உள்ளனர். கண்காணிப்பில் திண்டுக்கல் திண்டுக்கல், தேனி உட்பட பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அன்புநாதனுக்கு தொடர்பு இருக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் கருதுவதால், அந்த மாவட்டங்களிலும் திடீர் சோதனை நடத்த தயாராகி வருகின்றனர். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முதன் முதலாக அமைச்சராக பொறுப்பேற்ற போது அவருக்கு, அன்புநாதன் நெருக்கமானவராக இருந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும், ஆத்துார் தொகுதி தான் பணம் விளையாடும் தொகுதியாக கருதப்படுகிறது. தி.மு.க.,வின் பலம் வாய்ந்த, ஐ.பெரியசாமியை எதிர்த்து களம் இறங்குவதால், சில நாட்களாக இங்கு பணம் வெள்ளமாக பாய்கிறது.

பணம் சொல்வதை செய்யும். பணம் சொல்லாததையும் செய்யும்.

Friday, 22 April 2016

யாரை குறிவைக்கிறார் சீமான்? என்னன்னவோ சொல்கிறார்.ஆனால் பாடி லாங்குவேஜ் வேற என்னவோ சொல்கிறதே?

தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன. 1957-ம் ஆண்டு அண்ணாதுரை தி.மு.கவைத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட்டுகள் பலவீனப்பட்டார்கள்.

96-ம் ஆண்டு ம.தி.மு.க உதயமானபோது, தி.மு.கவுக்கு மாற்று என முன்வைக்கப்பட்டது. 89-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க மாற்று சக்தியாக முன்வைக்கப்பட்டது. கால ஓட்டத்தில் அதுவும் கரைந்துபோனது. 2006-ம் ஆண்டு தே.மு.தி.க கால் பதித்தபோது, பா.ம.கவும், ம.தி.மு.கவும் பலவீனப்பட்டது. அதுவே, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் தொடங்கிய கட்சிகளை மக்கள் ஆராதிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் மாற்றை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரவேற்பைக் கொடுத்தே வந்துள்ளனர். அந்த வகையில், 'தமிழனா... திராவிடனா?' என்ற கோஷத்தோடு களமிறங்கும் சீமானும் கவனிக்கப்படுகிறாரா? என்ற கேள்விக்கு மே 19 பதில் தரும். புதிய மாற்று என தே.மு.தி.க வந்தபோது பா.ம.க, ம.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும் என விஜயகாந்த் எண்ணவில்லை.

அரசியல் ஓட்டத்தில் அனைத்தும் இயல்பாகவே நடந்தன. அண்ணா கால்பதித்தபோது கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமடைவார்கள் என அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த வகையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க என பிரதான கட்சிகளுக்கு எதிராக சீமான் முன்வைக்கும் அரசியல் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் 'இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி!' -ஜெ.வை தாக்கும் சீமான் இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சை தான் உங்க முதலமைச்சர் பதவி என்று முதல்வர் ஜெயலலிதாவை தாக்கி ராமநாதபுரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார்.

You become chief minister of this begger's vote, Seeman Attack JayalalithaYou become chief minister of this begger's vote, Seeman Attack Jayalalitha

'தமிழ்நாட்டின் சிவசேனா, பாசிஸ்ட் சீமான்' என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதைக் கண்டு சீமான் கொதித்தாலும், பிரதான கட்சிகளுக்கு எதிராக அவர் முன்வைக்கும் வியூகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
1. மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. திருமாவும் கிருஷ்ணசாமியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. அவர்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில், பட்டியல் இனத்து மக்களின் வாக்குகளை, தமிழன் என்ற அடிப்படையில் கவர்வதற்காக, 20 அட்டவணை பிரிவு மக்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியுள்ளார்.

தமிழக அரசியலில் இதுபோன்று யாரும் இதுவரையில் செய்ததில்லை. ஓரிரு தொகுதிகளில் வேண்டுமானால் இதுபோல் செய்வார்கள். அதிரடியாக 20 பேரை களத்தில் நிறுத்துவது என்பது, திருமா போட்டியிடாத இடங்களில் உள்ள அவரது வாக்குகளை அப்படியே நாம் தமிழர் பக்கம் திருப்புவதற்காக மட்டும்தான். தமிழ்நாட்டில் 20 சதவீதம் பெரும்பான்மையாக உள்ள மக்களை நோக்கி சீமான் வைத்த முதல் குறி இது.

2. பா.ம.கவை திட்டமிட்டு காலி செய்யும் வகையில் வன்னியர் வாக்குகளை குறிவைக்கிறார். மற்ற அரசியல் கட்சிகள் நிறுத்தாத இடங்களில் நாம் தமிழர் சார்பில் 36 வன்னியர்கள் போட்டியிடுகின்றனர். அதிலும், 'வீரப்பனுக்கு மணிமண்டபம்' என்ற சீமானின் கோரிக்கை வன்னியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீரப்பனை அரக்கன் என்ற ரஜினி அழைத்தபோது, ராமதாஸ் கொந்தளித்துப் போனார். பல இடங்களில் பா.ம.கவினர் ரஜினிக்கு எதிராக கொந்தளித்தார்கள். ஆனால் ஜெயலலிதா, வீரப்பனை அரக்கன் என்று சொன்னபோது, ராமதாஸ் எந்த மறுப்பையும் வெளிக்காட்டவில்லை.

அ.தி.மு.கவோடு மோதல் போக்கையும் கடைபிடிக்கவில்லை. ராமதாஸ் கோட்டைவிட்ட இடத்தை பிடித்துக் கொண்டு, 'இப்போது அரக்கன் என்று ஜெயலலிதா சொல்வாரா?' என சவால்விடுகிறார் சீமான். நகர்ப்புற வாக்காளர்கள் பக்கம் அன்புமணி ஓடும்போது, கிராமப்புற வன்னியர்களை குறிவைத்து 25 வயதுள்ள இளைஞர்களை களத்தில் நிறுத்தியிருக்கிறார். இதன் மூலம் பா.ம.கவை பலவீனப்படுத்த முடியும் என நம்புகிறார் சீமான்.

3. " 'ரஜினி தமிழரே இல்லை என விஜயகாந்த் சொல்லும்போது, 'நாங்கள்தான் மாற்று' எனச் சொல்ல விஜயகாந்த்துக்கு அருகதை இல்லை. 2011 தேர்தலில் மாற்று எனச் சொல்லும் தகுதியை விஜயகாந்த் இழந்துவிட்டார். இவர் சொல்லும் மாற்று என்பதே ஏமாற்றுதான்" எனப் பேசுகிறார் சீமான். 'ரஜினி நேர்மையானவர். மராட்டி என வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். அவரை விமர்சிக்க விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது?' என குறிவைப்பதன் மூலம், விஜயகாந்த் எதிர்ப்பை கூர்மையாக்கி, ரஜினி வாக்குகளை தன்பக்கம் இழுக்கும் நோக்கம்தான். அதிலும், தே.மு.தி.கவும் பா.ம.கவும் அணிசேர்ந்த கட்சிகள்தான் என்ற பிரசாரத்தின் மூலம் வடபுலத்தில் உள்ள இவர்களுக்கு எதிரான வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் பக்கம் திருப்புகிறார்.

4. சீமானின் தி.மு.க-காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஈழ மக்களை படுகொலை செய்த கட்சி, ஊழல் கட்சி, தரகர்கள் கூட்டணி என கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதிலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தன்பக்கம் இழுக்க, 'காமராஜர் ஆட்சியை கொடுப்போம்' என்று சொல்வதும், காமராஜருக்குத் தளபதியாக இருந்த சிவாஜி கணேசனை தமிழர் என முன்னிறுத்துவதும் மிக முக்கியமான தந்திரங்கள். பா.ஜ.கவின் விநாயகர் கலாசாரத்தை எதிர்கொள்ள முருகனை முன்னிறுத்துகிறார். இதன்மூலம், 'இந்து வாக்கு வங்கியும் தன்பக்கம் வரும்' என்பதுதான்.

5. அ.தி.மு.கவின் வாக்காளர்களில் முக்குலத்தோர் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தமிழர்களின் சுயமரியாதையைப் பற்றிப் பேசுகிறார். 'ரோட்டில் விழுந்தால் அ.தி.மு.க, வீட்டில் விழுந்தால் தி.மு.க' என தமிழன் சுயமரியாதை இழந்து தவிப்பதை நையாண்டி செய்கிறார். அ.தி.மு.க, தி.மு.க விமர்சனத்தைக் கூர்மையாக்குவதன் மூலம், 'நாம் தமிழரே மாற்று' என மக்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார். தவிர, 'மக்கள் நலக் கூட்டணி என்பதே ஏமாற்றுதான். இவர்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது? திருமாவும் வைகோவும் முன்வைக்கும் ஈழ விடுதலையை சி.பி.எம், சி.பி.ஐ கட்சி ஏற்குமா? கொள்கையில்லாத கூட்டணி' என கடுமையாகத் தாக்குகிறார்.

6. தேர்தலில் மதுவிலக்கு மிக முக்கியமான முழக்கமாக இருக்கும்போது, 'செயற்கை மது கூடாது. இயற்கை மது வேண்டும்' என்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கொங்கு மண்டலம் மற்றும் ராமநாதபுரத்தில் பேசும்போது, 'கள்ளை பானமாக அறிவிப்போம்' என வாக்குக்காகச் சொல்வார்கள். ஆனால், சீமானோ, 'இயற்கை பானமாக கள்ளைக் கொண்டு வருவோம்' என உறுதியாக நிற்கிறார். இது பனைமரத் தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்கக் கூடிய வாக்குறுதியாக இருக்கிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகும் இரட்டை மெழுகுவர்த்தி பிரகாசமாக எரியுமா அல்லது பத்தோடு பதினொன்றாக கரைந்து போகுமா? என்பதற்கான விடை தெரிய இன்னும் முப்பது நாட்கள் இருக்கின்றன.

சீமானின் ஸ்டைல் புதுசா தினுசா இருக்கே.