டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை தட்டிக்கழிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பினராய் விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.முதன்முறையாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர், பின்னர் துணை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதேபோல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் சந்தித்தார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பேசினார். அப்போது, முல்லைப்பெரியாறு அணை தேவையான அளவு பலமாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகளை தட்டிக்கழிக்க முடியாது என்றும் தெரிவித்தார். "அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் முதல் பிரச்சனை. மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு பிரச்சினை அணுகப்பட்டது. ஆய்வு முடிகளின் தன்மையை பொருத்தே பிரச்சனையை அணுக முடியம்' என்றும் அவர் கூறினார்.
வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு ஆரம்பமாகிவிட்டார்.சல்யூட் தோழரே.
Sunday, 29 May 2016
முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை தட்டிக்கழிக்க முடியாது :கேரள முதல்வர் பினராயி விஜயன்
Saturday, 28 May 2016
புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தேர்வு........முன்னால் மத்திய இணையமைச்சர்.
புதுச்சேரியின் புதிய முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டுடன் சேர்ந்து புதுச்சேரிக்கும் மே 16ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 30 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க. இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியது.
முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டினார்கள். இதனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்து சுமார் பத்து நாட்கள் ஆன நிலையிலும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், டெல்லி சென்று மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். இந்த நிலையில், புதுச்சேரியின் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய மேலிடப் பார்வையாளர்கள் ஷீலா தீக்ஷித், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சனிக்கிழமை புதுச்சேரி வந்தனர்.
இவர்கள் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்திய நிலையில், புதிய முதலமைச்சராக நாராயணசாமியின் பெயரை வைத்தியலிங்கமும் நமச்சிவாயமும் முன்மொழிந்தனர். பிறகு அவர் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய முதல்வர் பதவியேற்கும் தேதி, அமைச்சரவை பட்டியல் ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை. முடிவுக்கு எதிராக போர்க்கொடி போராட்டத்தில் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் புதிய முதலமைச்சராக நாராயணசாமி தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்து புதுவை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்ற தனியார் விடுதிக்கு வெளியில் நாராயணசாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நாராயணசாமி முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டது ஏன் என அவர்கள் கேள்வியெழுப்பினர். காங்கிரஸ் கொடியை தீ வைத்துக் கொளுத்தியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அதற்குப் பிறகுதான், மேலிடப் பார்வையாளர்களான ஷீலா தீட்சித் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர்
திமுக தோல்விக்கு தேர்தல் கமிஷனே காரணம் ::கலைஞர்
சென்னை : ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டார்கள். ஆளும் கட்சியின் பண பலமும், தேர்தல் கமிஷனின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் தி.மு.க.வை தோல்வி அடைய செய்துவிட்டன. தி.மு.க.வை பொறுத்த வரை எந்த சவால்களையும் சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. தற்போது ஆளும் கட்சி, தி.மு.க.வை விட பல சவால்களை சந்தித்தாக வேண்டும். இப்போது முதல்வர் மாநில நன்மைக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறி இருக்கிறார். தமிழகத்திற்கு நல்லது கிடைக்கும் என்றால் தி.மு.க. சேர்ந்து பணியாற்ற ஒருபோதும் மறுத்ததில்லை. அதை வரலாறு சொல்லும். தஞ்சை, அரவக்குறிச்சியில் ஏற்கனவே திட்டமிட்ட படி தேர்தல் நடத்தி இருந்தால் 2 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டாலும் எங்கள் வெற்றி பாதிக்காது என தெரிவித்துள்ளார்
வைகோ விஜயகாந்த் மீது திருமாவளவன் கடும் அதிருப்தி?
மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று உண்மையில் இருந்ததா?' என்று சொல்லும் அளவுக்கு அதன் தலைவர்கள் திசைக்கொருவராய் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். ' வைகோவின் உணர்ச்சிவசப்பட்ட நாடகங்களும் விஜயகாந்தின் மேடை நாகரீகமில்லாத மேனரிசமும்தான் தோல்விக்குப் பிரதான காரணம்' எனக் கொந்தளிக்கின்றனர் வி.சி.க.வினர். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளிலேயே நல்ல வாக்குகளை வாங்கியது விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார் திருமாவளவன். தேர்தல் தோல்விக்குப் பிறகு, வி.சி.க.வின் 25 வேட்பாளர்களையும் அழைத்துப் பேசினார் திருமா. நேற்று முன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில், அடுத்த அரசியல் நகர்வை நோக்கி நீண்ட நேரம் விவாதம் நடத்தியுள்ளார். இதைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர். " திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற அரசியலுக்கான விதையை திருமாதான் முதலில் விதைத்தார். அந்த வகையில் இந்தத் தேர்தல் முடிவு எங்களுக்கு வெற்றிதான். ஏறக்குறைய 23 தொகுதிகளில் தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு எங்களால் பறிபோயிருக்கிறது. தலித் வாக்கு வங்கியைத் தக்க வைத்திருக்கிறோம். மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதற்கு முதல் காரணமாக நாங்கள் கருதுவது வைகோதான். ’தி.மு.க.வை வீழ்த்தவே ‘அ.தி.மு.க.-B டீம் போல வைகோ செயல்பட்டார்’ என்ற ஹேஷ்யங்களுக்கு எவ்வளவு முனைந்தும் எங்களால் விளக்கமளிக்க முடியவில்லை. போதாதற்கு வைகோவும் அது தொடர்பான கேள்விக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து வெளியேறியது, அந்தக் கேள்வியைக் கேட்டாலே சீறுவது என அவரது செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தையே உருவாக்கியது. அந்த நேரத்தில் கூட்டணியின் மற்ற தலைவர்கள், இதை சரியாகக் கையாளவில்லை. அதேபோல், பொதுக் கூட்டங்களில் விஜயகாந்த் நடந்து கொள்ளும் விதத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. '
ஒரு முதல்வர் வேட்பாளர் இப்படித்தான் இருப்பாரா?' என எள்ளி நகையாடும் அளவுக்கு அவருடைய பேச்சுக்கள் இருந்தன. 'வெள்ளந்தியாகப் பேசுகிறார்' என சப்பைக்கட்டு கட்டினாலும், அது வாக்குகளாகக் குவியவில்லை. விஜயகாந்த் தோல்வியே அதற்கு வலுவான ஆதாரம். இதைப் பற்றித்தான் திருமா எங்களிடம் நீண்டநேரம் பேசினார். ' எங்களை ஒதுக்கிவைத்தால்தான் கொங்கு மண்டலத்தில் ஓட்டு வாங்க முடியும்' என தி.மு.க நிர்வாகிகள் கணக்கு போட்டு எங்களை வெளியேற்றினார்கள். ஆனால், கொங்கு மண்டலத்தில் அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க பறிகொடுத்துவிட்டது. இப்போது எங்களது வாக்கு வலிமையை தி.மு.க தலைமை உணர்ந்திருக்கும். தவிர, தேர்தலில் தலித் ஓட்டுக்களை மட்டுமே முழுவதுமாக எங்கள் வேட்பாளர்கள் வாங்கினார்கள். தலித் அல்லாதவர்கள் வாக்குகள் எந்த பூத்திலும் எங்களுக்கு விழவில்லை.
தலித் வாக்கு வங்கியை தக்க வைத்திருக்கிறோம் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுவிட்டது" என்றவரிடம், "அடுத்து வரக் கூடிய தேர்தல்களில் திருமாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?" என்றோம். "ரொம்ப சிம்பிள். இனி மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்கும் முடிவில் தலைவர் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிடவும் ஆர்வம் காட்டவில்லை. அடுத்து வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களின் இலக்கு. பா.ஜ.க.வின் மதவாத எதிர்ப்பு அரசியலை நோக்கிச் செயல்படப் போகிறார் திருமா. சிதம்பரம், விழுப்பும், காஞ்சிபுரம் என நாங்கள் வலுவாக இருக்கும் மூன்று எம்.பி தொகுதிகளில் தேர்தல் வேலைகளைத் தொடங்க இருக்கிறோம். தொகுதிக்கு மூன்று லட்சம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் நாங்கள் இடம் பெறவே வாய்ப்பு அதிகம். தி.மு.க.வும் இதையேதான் விரும்புகிறது. எம்.பி தேர்தலை நோக்கிய பயணத்தில் இருக்கிறார் திருமா" என்றார் உற்சாகத்தோடு. 'அரசியல் என்பது எதையும் சாதகமாக்கிக் கொள்ளும் கலை' என்பார்கள். மாற்றத்தை முன்வைத்து வி.சி.க வாங்கிய வாக்குகளின் பலனை நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை செய்ய ஆயத்தமாகிவிட்டாரா தொல்.திருமாவளவன்!?
Thursday, 26 May 2016
முன்னால் தமிழக தேர்தல் அதிகாரி பிரவின்குமாரின் சொத்து மதிப்பு அதிரடியாக உயர்வு காரணம் .....இறைவனிடம் கேளுங்கள் அவன்-இல்லையென்று சொல்லுவதில்லை .........
இந்த புகை படத்தை பாருங்கள் திரு பிரவீன் குமார் அவர் கையொப்பம் இட்ட ஆவணம் அதில் அவருக்கு தமிழக அரசு \ வீட்டை தந்து உள்ளது. யாருக்கு ?? ஏற்கனவே இரண்டு மனையும் ., ஒரு வீட்டையும் வைத்து இருந்தவருக்கு .இதுவே குற்றம் ..சரி மேல வருவோம் Noida வில் ருபாய் 35.25 லட்சம் கொடுத்து 28/7/2011 இல் வீட்டை வாங்கியவர் இதற்குள் 34.90 லட்சம் கட்டி விட்டார் அது மட்டும் இல்லை இதே நேரத்தில் சென்னையில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் சுமார் 85 லட்சம் உள்ள விட்டை... bid dated 10/9/2012 தருகிறது .. இதிலும் இவர் ஜன 2014 வரை இங்கயும் 40 லட்சம் கட்டி விட்டார் அடேயப்பா சுமார் 26 மாதத்தில் 74.90 லட்சம் கட்டி விட்டார் ..அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டுகிறார் .. எப்படி சம்பளம் 75,300 ருபாய் மட்டுமே வாங்கி கொண்டு ..கட்டுகிறார் என்றால் பிரவீன்குமார் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கிய வழக்கினை இவர் மீது யார் ...............
Sunday, 22 May 2016
புதிய அமைச்சர்கள் பட்டியல்............மீண்டும் பன்னீர்செல்வம் நிதியமைச்சர்.....
ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் இன்று மாலை வெளியானது. முதல்வர் வசமே காவல்துறை உள்ள நிலையில், புதுமுகங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல, தற்போதைய அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து ஆளுநர் ரோசய்யாவை இன்று மாலை சந்தித்த ஜெயலலிதா, ஆட்சியமைக்க தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அதற்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தையும் வழங்கினார்.
இதையடுத்து ஜெயலலிதாவை ஆட்சியமைக்க ஆளுநர் ரோசய்யா அழைப்புவிடுத்தார். இந்நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்த பட்டியல் மாலை 6 மணியளவில் வெளியானது.
அந்த பட்டியல் இதுதான்:
முதல்வர் ஜெயலலிதா- பொது நிர்வாகம், ஆட்சிப் பணி, காவல்துறை ஓ. பன்னீர்செல்வம்- நிதித்துறை திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணி, நெடுஞ்சாலை செல்லூர் கே. ராஜூ- கூட்டுறவுத் துறை, தொழிலாளர் துறை தங்கமணி- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை வேலுமணி- உள்ளாட்சி ஜெயக்குமார்- மீன்வளம் சிவி சண்முகம்- சட்டம் கேபி அன்பழகன் - உயர் கல்வித்துறை டாக்டர் சரோஜா- சமூக நலத்துறை கேசி கருப்பண்ணன் -சுற்றுச்சூழல் எம்சி சம்பத்; தொழில்துறை ஆர் காமராஜ்- உணவு, இந்து சமய அறநிலையத் துறை ஓ.எஸ். மணியன் - ஜவுளி, கைத்தறி உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி சி விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத்துறை எஸ்பி சண்முகநாதன் - பால்வளத்துறை துரைக்கண்ணு- கால்நடை, விவசாயம் கடம்பூர் ராஜூ- தகவல், விளம்பரத்துறை உதயகுமார்- வருவாய்த்துறை ராஜேந்திர பாலாஜி- ஊரக தொழில்துறை பெஞ்சமின் - பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன் கே.சி. வீரமணி- வணிகவரி வெல்லமண்டி நடராஜன் -சுற்றுலாத்துறை எஸ். வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் ராஜலட்சுமி- ஆதி திராவிடர் நலத்துறை டாக்டர் மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம் எம்.ஆர். விஜயபாஸ்கர்- போக்குவரத்து புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 23ம் தேதி திங்கள்கிழமை பகல் 12 மமஇக்கு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. சட்டசபை கூடியதும், தற்காலிக சபாநாயகர் செம்மலைக்கு பதிலாக வேறு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதனிடையே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பெயர் முறைப்படி இன்று இரவு அரசிதழில் வெளியிடப்பட்டது
அதிமுக வின் 4வது ராஜ்யசபா சீட்டுக்காக அரவகுறிச்சி தஞ்சாவூரை தள்ளிவைக்கும் தேர்தல் ஆணையம்.......
மாநிலங்களவைத் தேர்தலில் 4 இடங்களில் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக விளங்கும் சூழல் உருவாகி யுள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ஏ.டபிள்யூ. ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134, திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுக 3, திமுக 2 இடங் களில் எளிதாக வெற்றி பெறும். 6-வது இடத்தைப் பெறும் வாய்ப்பு அதிமுகவுக்கு அதிகம் உள்ளது. தற்போது மக்களவையில் 37, மாநிலங்களவையில் 12 என நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு 49 எம்பிக்கள் உள்ளனர். காலி யாகும் 3 மாநிலங்களவை உறுப் பினர் பதவிகளை அதிமுக எளி தாகப் பெற்றுவிடும். 6-வது இடத் திலும் அதிமுகவுக்கே அதிக வாய்ப் புகள் இருப்பதால் ஜூன் 11-ம் தேதிக்குப் பிறகு மாநிலங்களவை யில் அதிமுகவின் பலம் 13 ஆக அதிகரிக்கும். இதன் மூலம் நாடாளு மன்றத்தில் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கும்.
ஆதரவு அவசியம் 50 எம்.பி.க்கள், 134 எம்எல்ஏக் களுடன் மிக வலுவாக இருப்பதால் 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக விளங் கும். குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்களும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக் களவை, மாநிலங்களவை எம்பிக் களும் வாக்களிக்க தகுதி படைத்த வர்கள். குடியரசுத் தலைவர் தேர் தலில் மக்கள் தொகை அடிப் படையில் அந்த மாநிலத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் வாக்குகளுக்கு மதிப்பு அதிகரிக் கும். எனவே, இத்தேர்தல்களில் அதிமுக முக்கிய சக்தியாக விளங் கும் எனக் கூறப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பார் என்பதால் அதில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இதில் எளிதாக வெல்ல வேண்டுமானால் அதிமுகவின் ஆதரவு அவசியம். எனவேதான் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்கள் அதிமுகவுடன் இணக்க மான போக்கை கடைப்பிடித்து வருவதாக பாஜக தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
Sunday, 15 May 2016
நக்கீரன் இன்றைய கணிப்பு: திமுக 133 அதிமுக 75 பாமக1 மநகூ 1 இழுபறி 24 தொகுதிகள்
Saturday, 14 May 2016
அழகிரி அதிமுக விற்கு ஆதரவு ........அதிர்ச்சியில் அறிவாலயம் அடுத்தது என்ன எல்லாம் கலைஞர் கையில்........
மதுரை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக்கிடக்கிறது திமுக தலைமை. திமுக - அழகிரி முட்டல் மோதல்கள் முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார். மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு குறித்து' அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவும் இல்லை' என்று மீடியாக்களிடம் கருத்துச்சொன்னார் ஸ்டாலின். ஆனால் அந்த சந்திப்பின்போது தான் மீண்டும் இணைந்து செயல்பட பல நிபந்தனைகளை தந்தை கருணாநிதியிடம் அழகிரி முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து வந்த செய்திகளில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில் திமுக தனது சட்டமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் ஸ்டாலின் ஆட்களே பெருமளவு இருந்தனர். அப்செட் ஆன அழகிரி மீண்டும் வனவாசம் சென்றவர் போல் ஒதுங்கிக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் 'மதுரையில் திமுக பத்து தொகுதியிலும் தோற்கும்' என்று கொதிப்பை வெளிப்படுத்தினார்.
தேர்தல் நேரத்தில் மீடியாக்களிடம் அழகிரி வாயை திறக்க வேண்டாம். அவர் வாய் திறந்தால் வில்லங்கம் வருமென்று கருணாநிதி தரப்பில் செல்வியிடம் முறையிட்டனர். ஆனால் அழகிரி தரப்பு அதை கேட்கவில்லை. மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வரும் கருணாநிதி, அழகிரியை சந்திப்பார். சில முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று அழகிரியிடம் ஆறுதலாக சொல்லி அடக்கி வைத்தனர். ஆனால் மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதி இரண்டு நாட்களாக மதுரையில் முகாமிட்டு பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரமும் செய்தார். ஆனால் அழகிரி தரப்பினரை கருணாநிதி பார்க்காததால் அழகிரியின் ஒட்டு மொத்த குடும்பமும் உஷ்ணமாகிவிட்டனர். இதனால் 'கட்சியை தாண்டி பேரன் பேத்திகளை பார்க்கக் கூட மனமில்லையா' என அழகிரி தரப்பு எரிச்சலடைந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,' நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது ஒரு பெண்மணி, 'தி.மு.க.வுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’ என்று கேட்க, 'நான் சொல்றத செய்யுங்கம்மா' என்று அழுத்தமாக கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். அழகிரியின் ஆதரவாளர்கள் கலைந்து போகாமல் அப்படியே நின்றிருந்தனர்.
திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சியைப்போல அமைதியாக இருந்தது அழகிரியின் வீடு. வீட்டிற்குள் போன அழகிரி மறுபடியும் வெளியே வந்தவர் " வரும் 19 ம் தேதிக்குப் பிறகு இந்தக்கூட்டம் கூட இங்கு வரமாட்டீங்க" என்று கலங்கினார். அதைக் கேட்டு அழகிரியின் ஆதரவாளர்கள்," நாங்க எங்கேயும் போக மாட்டோம். எப்பொழுதும் உங்களுடன்தான் இருப்போம் "என்றார்கள். அதற்கு “பார்க்கலாம்...பார்க்கலாம்... அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார் அழகிரி. அழகிரியின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணனின் பேச்சை கேட்போம் என முடிவெடுத்தாலும் அதற்கு அடுத்த வரிசை ஆதரவாளர்கள் மனநிலை வேறு மாதிரி உள்ளது. “இவர்கள் அண்ணனை பயன்படுத்தி அதிகார பலன்களை அடைந்துவிட்டார்கள். இனி அவர்களுக்கு கட்சி பின்னணி தேவையில்லை. ஆனால் அண்ணன் சொல்கிறார் என்பதற்காக நாம் அதிமுகவிற்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் கட்சியின் கதவுகள் நிரந்தரமாக நமக்கு அடைக்கப்பட்டுவிடும். நாம் பொறுத்திருந்துதான் முடிவெடுக்கவேண்டும் என்று தங்களுக்குள் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அழகிரியின் இந்த முடிவால் திமுக தலைமை கடைசி நேரத்தில் அழகிரியால் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அமைதி காப்பதென இப்போதைக்கு முடிவெடுத்திருப்பதாக திமுக தரப்பில் கூறுகிறார்கள். மதுரையில் வெயிலை விட தேர்தல் அனல் படு உஷ்ணமாக இருக்கிறது.
கலைஞரின் முடிவுக்காக காத்துக்கிடக்கிறது அறிவாலயம்.